/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 17, 2024 04:39 AM

வானுார்:வானுார் ஒன்றியத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை, எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. வானுார் ஒன்றியத்தில் கிளியனுார், ராவுத்தன்குப்பம், பாப்பாஞ்சாவடி, திருச்சிற்றம்பலம், பூத்துறை, பெரம்பை பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்தும், திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார். வாக்காளர் பெயர் பட்டியல் குறித்து பொது மக்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், ஜெ., பேரவைச் செயலாளர் வீரப்பன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா.
மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, அம்பேத்குமார், மாணவரணி துணைத்தலைவர் ஜெய்பீம், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பாசறை துணைச் செயலாளர் வினோத்குமார், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.