sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.85 லட்சத்தில் புதிய கட்டடங்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

/

ரூ.85 லட்சத்தில் புதிய கட்டடங்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ரூ.85 லட்சத்தில் புதிய கட்டடங்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ரூ.85 லட்சத்தில் புதிய கட்டடங்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு


ADDED : ஜூலை 23, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் 7 இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டிய அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, பயணிகள் நிழற்குடை புதிய கட்டடங்களை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

விழுப்புரம் 30வது வார்டு ஆசிரியர் நகர் பகுதியில், விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.9.20 லட்சத்தில் கட்டிய புதிய ரேஷன் கடை கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.

தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர்மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் வசந்தி, கூட்டுறவு சங்க இணைபதிவாளர் விஜயசக்தி, விழுப்புரம் நகர செயலர்கள் வெற்றிவேல், சக்கரை, மாவட்ட வர்த்தக அணி வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி கேசவன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் சத்தியவதி வீரநாதன், மணி, சாந்தராஜ், வார்டு செயலாளர்கள் வீரநாதன், தங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த்ராஜ், அருள், வார்டு நிர்வாகிகள் முருகதாஸ், பாவாடை, வெற்றிவேல், சந்தோஷ், லதா முருகன், ரமேஷ், பிரசாந்த், ஜோவிட் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல், கிழக்கு பாண்டிரோடு ஆசிரியர் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.10 லட்சத்தில் கட்டிய புதிய பயணியர் நிழற்குடையை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

தொடர்ந்து, விழுப்புரம் 5வது வார்டு எருமணந்தாங்கல் பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14.60 லட்சத்தில் புதிதாக கட்டிய அங்கன்வாடி மையத்தை, அவர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

கவுன்சிலர்கள் நந்தா நெடுஞ்செழியன், மணி, ஊராட்சி தலைவர் சேகர், முன்னாள் கவுன்சிலர் காசிநாதன், வார்டு செயலாளர்கள் ராஜா, தங்கம், வர்த்தக அணி சூரியமூர்த்தி, பிரதிநிதிகள் ஞானதேசிகன், விஜயரங்கன், சீனிவாசன், பாலாஜி, காமராஜ், அருண், கிறிஸ்துராஜ், பாஸ்கர், சவுந்தர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல், அலமேலுபுரத்தில் ரூ.13.50 லட்சத்தில் பொது வினியோக திட்ட கட்டிடம், வழுதரெட்டியில் ரூ.13.90 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் என, மொத்தம் 7 இடங்களில், ரூ.85 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டடங்களை, அவர் திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us