/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு கல்வி கடன் எம்.எல்.ஏ., மஸ்தான் வழங்கினார்
/
மாணவர்களுக்கு கல்வி கடன் எம்.எல்.ஏ., மஸ்தான் வழங்கினார்
மாணவர்களுக்கு கல்வி கடன் எம்.எல்.ஏ., மஸ்தான் வழங்கினார்
மாணவர்களுக்கு கல்வி கடன் எம்.எல்.ஏ., மஸ்தான் வழங்கினார்
ADDED : நவ 13, 2024 04:38 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் விழுப்புரம் மாவட்டநிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான முகாம் நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் வரவேற்றார்.
இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் உயர் கல்வி படிக்கும் மாணவர்களு கல்வி கடன் சார்ந்த திட்டங்களை விளக்கி பேசினார்.
எம்.எல்.ஏ., மஸ்தான் மாணவர்களுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கிகளின் மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் நடராஜன் நன்றி கூறினார்.