ADDED : மார் 15, 2026 04:15 AM

விழுப்புரம்: கண்டம்பாக்கம், ஒருகோடி, அனிச்சம்பாளையம், விழுப்புரம் மேல்தெரு பகுதிகளில் உள்ள புதிய ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகர பொறுப்பாளர் வெற்றிவேல், ஊராட்சி தலைவர்கள் பாலமுருகன், தனசேகர், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, பூங்குன்றம், பட்டு ஆறுமுகம்.
கிளைச் செயலாளர்கள் நேத்தாஜி, சுதாகர், கந்தன், ஏழுமலை, நாராயணசாமி, சுதாகர், கணேசன், அவைத் தலைவர் தீர்த்தமலை, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து, மாவட்ட நிர்வாகிகள் சம்பத், கேசவன், மணிகண்டன், கவுன்சிலர் நந்தா நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
