/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்குகளால் பாதிப்பு கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
/
மர்ம விலங்குகளால் பாதிப்பு கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
மர்ம விலங்குகளால் பாதிப்பு கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
மர்ம விலங்குகளால் பாதிப்பு கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : ஆக 22, 2025 09:56 PM
விழுப்புரம் : மர்ம விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டுமென கலெக்டரிடம் மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விழுப்புரம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மானை சந்தித்து, அவர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கொங்கரப்பட்டு, ஆசூர், குடிசைப்பாளையம், ரெட்டணை உள்ளிட்ட கிராமங்களில் மர்ம விலங்குகள் கடித்து 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
இந்த மர்ம விலங்கை பிடிப்பதற்கு, வனத்துறையின் மூலம் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி, இரவு நேரங்களில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மர்ம விலங்கு கடித்து கால்நடைகளை இழந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் போதிய இழப்பிட்டுத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.