/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர் கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு

ADDED : டிச 24, 2025 06:48 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்திற்கு, இந்திரா காந்தி பெயரை வைக்க வேண்டும் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் நகராட்சி கமிஷனரிடம் பானுமதியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
திண்டிவனம் - சென்னை சாலையில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு, சில மாதங்களுக்கு முன் நடந்த நகர மன்ற கூட்டத்தில், 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்' என பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பஸ் நிலையத்திற்கு, 'இந்திராகாந்தி பேருந்து நிலையம்' என பெயர் வைக்கக்கோரி, திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
நகர மன்ற கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்தை (முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்) ரத்து செய்துவிட்டு, 'இந்திராகாந்தி பேருந்து நிலையம்' என பெயர் வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் ரூபன்ராஜ் உடனிருந்தனர்.