ADDED : அக் 16, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி ; விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி காணை அடுத்த கருங்காலிப்பட்டைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது வீடு மின் கசிவு காரணமாக தீப் பிடித்து எரிந்து சேதமானது. தகவலறிந்த அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவராண தொகை மற்றும் இலவச அரிசி, வேட்டி ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சீனுவாசன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர் உடனிருந்தனர்.