/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சப் கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,கோரிக்கை மனு
/
சப் கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,கோரிக்கை மனு
ADDED : நவ 09, 2025 06:20 AM

திண்டிவனம்: திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன், சப் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.
கட்சி நிர்வாகிகளுடன் சென்று சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜனிடம் அளித்த மனு:
திண்டிவனம் சட்டசபை தொகுதி, கிடங்கல் (1) பகுதி முத்துகிருஷ்ணன் தெருவில் உள்ள 279 வாக்காளர்கள், ஒன்றரை கிலோ மீட்டர் துாரமுள்ள ஜெயபுரம் தாகூர் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலுள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று கடந்த தேர்தலில் ஓட்டு போட்டனர்.
இந்த ஓட்டுச்சாவடி துாரமாக உள்ளதால், கிடங்கல் (1) பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடிக்கு 279 வாக்காளர்களை மாற்ற வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதாயளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், எம்.ஜி.ஆர்.,மன்றம் ஏழுமலை, ஜெ.,பேரவை நிர்வாகிகள் பாலசுந்தரம், விஜயகுமார், ரூபன்ராஜ் உடனிருந்தனர்.

