/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை புகார் குறித்த ஆய்வில் எம்.எல்.ஏ., டென்ஷன்; ஒப்பந்த நிறுவன மேலாளர், அதிகாரிகளுக்கு 'டோஸ்'
/
பாதாள சாக்கடை புகார் குறித்த ஆய்வில் எம்.எல்.ஏ., டென்ஷன்; ஒப்பந்த நிறுவன மேலாளர், அதிகாரிகளுக்கு 'டோஸ்'
பாதாள சாக்கடை புகார் குறித்த ஆய்வில் எம்.எல்.ஏ., டென்ஷன்; ஒப்பந்த நிறுவன மேலாளர், அதிகாரிகளுக்கு 'டோஸ்'
பாதாள சாக்கடை புகார் குறித்த ஆய்வில் எம்.எல்.ஏ., டென்ஷன்; ஒப்பந்த நிறுவன மேலாளர், அதிகாரிகளுக்கு 'டோஸ்'
ADDED : செப் 04, 2024 11:21 AM

விழுப்புரம்,: விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடுவதாக வந்த புகாரின் பேரில், எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கான்ட்ராக்ட் நிறுவன ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு டோஸ் விட்டதோடு, பணியை தரமாக மேற்கொண்டு, பராமரிக்க அறிவுறுத்தினார்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பழைய 36 வார்டு பகுதிகளிலும், நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 6 வார்டு பகுதிகளிலும், பாதாள சாக்கடைத் திட்டம், முடிக்கப்படாமல் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6,000 குடியிருப்புகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஓராண்டு பராமரிப்பு காலத்திற்கு பிறகு, தொடர் பராமரிப்புப் பணிகளுக்கு, நகராட்சியிடம் வழங்கியுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில், பல இடங்களில் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவதாகவும், பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர் புகார்களைத் தொடர்ந்து, விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா, கான்ட்ராக்ட் நிறுவன மேலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் நகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட மாம்பழப்பட்டு சாலை, அலமேலுபுரம், ஜெயலட்சுமி நகர் பகுதியில், பாதாள சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடி செல்வதை பார்வையிட்டனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவு நீர் வழிந்தோடும் அவல நிலை குறித்து தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு டென்ஷன் ஆன எம்.எல்.ஏ., 'இங்கு நீண்ட நாள்களாக கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை ஏன் சரி செய்யவில்லை. பல இடங்களில் கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி இந்த புகார்கள் வருவது தெரியாதா' என கான்ட்ராக்ட் நிறுவன மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய அவர், இதுபோன்ற பகுதிகளை ஆய்வு செய்து, ஒப்பந்ததாரர் மூலம் உடனே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பகுதிகளில், மக்கள் புகார் அளிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில், புகார்களுக்கு இடமளிக்காத வகையில், பாதாள சாக்கடை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.