/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் நாகலாபுரம் பாலம் கட்டித்தர எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்
/
திண்டிவனம் நாகலாபுரம் பாலம் கட்டித்தர எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்
திண்டிவனம் நாகலாபுரம் பாலம் கட்டித்தர எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்
திண்டிவனம் நாகலாபுரம் பாலம் கட்டித்தர எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 04:33 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த நாகலாபுரம் பாலத்தை புதியதாக அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் சட்டசபையில் கோரிக்கை விடுத்து பேசினார்.
அவரது பேச்சு விபரம்:
திண்டிவனம் நகராட்சி 26வது வார்டு, நாகலாபுரம் ஜாய்ஸ் பொன்னையா தெருவில் உள்ள பாலம் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்தது. இதனால் பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் என அனைவரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து கடந்த 21ம் ஆண்டு மானிய கோரிக்கையில் தெரிவித்திருந்தேன். கடந்த ஆண்டு பெய்த பெஞ்சல் புயலால், திண்டிவனம் நகரம் முழுதும் பாதிக்கப்பட்ட போது, ஆய்விற்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்து பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சேதமடைந்த பாலத்தை கட்ட அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசுகையில், 'எம்.எல்.ஏ., கூறிய பாலம், நெடுஞ்சாலைத் துறைக்கும், நகராட்சிக்கும் சேர்ந்த இடமாக உள்ளது. நடப்பு ஆண்டில் பல இடங்களில் சாலை போடுவதற்கு கூடுதலாக 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலையை கணக்கிட்டு உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.