தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'

 எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'

 எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'


ADDED : மார் 16, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது.

இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.

தொடர்ந்து, பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில், அருகில் உள்ள விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தாசில்தார் யுவராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

முன்னதாக, அலுவலகத்தில் இருந்த தலைவர்கள் போட்டோ மற்றும் எம்.எல்.ஏ., பெயர் பலகையை அகற்றினர்.

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மகாதேவன் தலைமையில், சமூக பாதுகாப்பு நல தாசில்தார் வேல்முருகன்,, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ., ஜெயகாந்தன் ஆகியோர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us