/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல், ஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் பயிற்சி

ADDED : ஜூன் 09, 2025 11:26 PM
விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மொபைல் போன் மற்றும் ஏ.சி., பிரிட்ஜ் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மொபைல் போன் சர்வீஸ் மற்றும் ஏ.சி., ப்ரிட்ஜ் சர்வீஸ்க்கு, 30 நாள் இலவச தொழில் பயிற்சி நடக்கிறது. இதற்கான நேர்முகத்தேர்வு வரும் 16ம் தேதி நடக்கிறது. இதற்கு 18 முதல் 45 வயது வரை உள்ள, 8ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கும் மேல் கல்வி தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ நுாறு நாள் அட்டையிருந்தாலும், கிராமபுறத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், நுாறு நாள் வேலை அட்டை நகல் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04146 - 294115 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.