/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை பாதிப்பு தகவல் தெரிவிக்க மொபைல் போன் எண்கள்.... வெளியீடு
/
மழை பாதிப்பு தகவல் தெரிவிக்க மொபைல் போன் எண்கள்.... வெளியீடு
மழை பாதிப்பு தகவல் தெரிவிக்க மொபைல் போன் எண்கள்.... வெளியீடு
மழை பாதிப்பு தகவல் தெரிவிக்க மொபைல் போன் எண்கள்.... வெளியீடு
ADDED : அக் 16, 2024 07:01 AM

விழுப்புரம்,: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழையின் போது மின் விபத்தைத் தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மின் விபத்து குறித்து தெரிவிக்கவும் மின்வாரியம் பிரத்யேக மொபைல் போன் எண்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2 தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி காக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில், விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்கம்பங்கள், மின் கம்பிகள், தளவாட பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
களப்பணியாளர்கள் இயற்கை இடர்பாடுகளின் போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்ய, அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்து முழு வீச்சில் செயல்படும் வகையில் உள்ளனர்.
பருவமழையால் ஏற்படும் மின்தடை, மின்சாதனங்கள் சேதாரம், மின் விபத்து பற்றி தெரிவிக்க பிரத்யேகமாக 94983 90744 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்தடை, மின்பழுது புகார்களை 24 மணிநேரமும் சென்னை தலைமையகத்தில் இயங்கும் மின்னகம் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 94458 55768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
அறுந்து தரையில் விழுந்துள்ள மேல்நிலை மின் கம்பிகள், தாழ்வு, தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். இடி அல்லது மின்னலின் போது 'டிவி', மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஈர கைகளோடு மின் விளக்கு சுவிட்சை போடக்கூடாது. மின்கசிவு விபத்தைத் தவிர்க்க ஆர்.சி.சி.பி., பிரேக்கர் பொருத்த வேண்டும்.
மேலும், தங்கள் பகுதியில் மின்சாரம் சார்ந்த புகார்களுக்கும், மின்கம்பிகள் அறுந்து விழும் அவசர கால சமயங்களிலும் செயற்பொறியாளர், மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
செயற்பொறியாளர்கள் விழுப்புரம் 94458 55738, கண்டமங்கலம் 94458 55769, திண்டிவனம் 94458 55835, செஞ்சி 94458 55784 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தெரிவித்துள்ளார்.