ADDED : செப் 30, 2025 06:35 AM

விழுப்புரம் :விழுப்புரம் ரயில் நிலையத்தில் மொபைல் போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்தில், நேற்று முன்தினம் காலை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பியோடினார்.
அவரை, பிடித்து, விசாரித்தனர். அதில், அவர் சிவகங்கை அடுத்த பொச்சேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவானந்தம், 29; என தெரிந்தது.
மேலும் இவர், கடந்த 10 நாட்களுக்கு முன் திருவண் ணாமலை, நேதாஜி நகரைச் சேர்ந்த சிவநேசன், 72; என்பவர், ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்த போ து, அவரிமிருந்து மொபைல் போன் திருடியது.
கடந்தாண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருடியது. வாலிபரி டம் லேப்டாப், 10 ஆயிரம் ரூபாய் திருடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சிவானந்தம் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.