sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல் சர்வீஸ் இலவச பயிற்சி

/

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல் சர்வீஸ் இலவச பயிற்சி

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல் சர்வீஸ் இலவச பயிற்சி

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் மொபைல் சர்வீஸ் இலவச பயிற்சி


ADDED : ஜன 08, 2024 05:18 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், மொபைல் சர்வீஸ் இலவச தொழிற்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், மொபைல் சர்வீஸ் 30 நாட்கள் இலவச தொழிற் பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 10ம் தேதி நடக்கிறது. பயிற்சி வரும் 18ம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சியில் சேர 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர்பவரின் பெயரில், நுாறு நாள் வேலை திட்ட அட்டை இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கிராமப்புற மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோருக்கு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ், வங்கி புத்தகம், நுாறு நாள் வேலை அட்டை நகல்களை கொண்டு வரவேண்டும்.

இது பற்றி மேலும் விபரங்கள் அறிய தொலைபேசி 04146 294115, மொபைல் எண்.7598466681 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.






      Dinamalar
      Follow us