கல்லுாரி மாணவர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
கல்லுாரி மாணவர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : பிப் 01, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு மாதிரி ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காப்பியாம்புலியூர் தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் தலைமையில் மாணவர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு குறித்தும், ஓட்டுப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும் செயல் விளக்கம் அளித்தார்.
மாணவர்கள் அனைவரும் மாதிரி ஓட்டுப்பதிவு செய்தனர்.
கல்லுாரி தாளாளர் மகாதேவன், துணை சேர்மன் குபேரன், கல்லுாரி முதல்வர் ராமதாஸ், வருவாய் ஆய்வாளர் தேவசேனா வி.ஏ.ஓ., ஜெயகாந்த், உதவியாளர் சதீஷ் அரவிந்தன், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
