/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மோடி சுட்ட வடை' தி.மு.க.,வினர் பிரசாரம்
/
'மோடி சுட்ட வடை' தி.மு.க.,வினர் பிரசாரம்
ADDED : மார் 16, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் பொது மக்களுக்கு வடை கொடுத்து 'மோடி சுட்ட வடை' என பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையத்தில் மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு மோடி எதுவும் செய்ய வில்லை. வாயால் வடை சுட்டு வருகிறார். இதான் 'மோடி சுட்ட வடை' என பொதுமக்களிடம் வடை கொடுத்து நுாதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

