/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொளசூர் மகா பெரியவா நகர் ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் தகவல்
/
மொளசூர் மகா பெரியவா நகர் ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் தகவல்
மொளசூர் மகா பெரியவா நகர் ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் தகவல்
மொளசூர் மகா பெரியவா நகர் ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் தகவல்
ADDED : ஏப் 26, 2025 09:45 AM
திண்டிவனம் : திண்டிவனம், மொளசூரில் அமைந்துள்ள அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப், ஸ்ரீ மகா பெரியவா நகர், பாரம்பரிய வாழ்வியலையும், நவீன வசதிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து அக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி சாலை திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப், ஸ்ரீ மகா பெரியவா நகர், பாரம்பரிய வாழ்வியலையும், நவீன வசதிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு அதிசயமான திட்டமாக உருவெடுத்துள்ளது. இது இல்லமாக மட்டும் இன்றி, ஒரு ஆன்மிக வாழ்க்கை முறையை அளிக்கும் புனித இடமாகும்.
மகா பெரியவரின் வழிகாட்டலில் அமைந்த இந்த அக்ரஹாரம், வேத பாரம்பரியத்தையும், ஆன்மிக ஒளியையும் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு அம்சமும் சாஸ்திர பூர்வமாக, கலாசார பண்பாட்டு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகா பெரியவா நகர் முக்கிய சாலையில் அமைந்ததால் முதன்மை மருத்துவமனைகள், புகழ்பெற்ற கல்வி நிலையங்கள், தொழில்துறைகள் அனைத்தும் அருகிலேயே உள்ளன. 24 மணி நேர நிரந்தர மின்சாரம், குடிநீர் வசதியுடன், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப உட்கட்டமைப்பு முழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது.
மால்கள், கல்யாண மண்டபங்கள், பள்ளிகள் என அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளன. இதை ஒரு தன்னிறைவு பெற்ற நகரமாக மாற்றும் முயற்சி தொடங்கி விட்டது.
இடத்தை பார்வையிட மற்றும் கூடுதல் தகவலுக்கு ஸ்ரீ ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர், அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப், ஸ்ரீ மகா பெரியவா நகர், திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு எதிரே, திண்டிவனம் என்ற முகவரியிலும், 99400 66177 மொபைல் எண்ணிலும், www.aghraharam.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கீர்த்திவாசன் ஐயர் கூறினார்.