/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சிகளுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தி பணிகளை முடிக்க வேண்டும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிவுரை

ADDED : ஜூலை 20, 2025 09:46 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், எம்.எல்.ஏ.,க்கள் மணிக்கண்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களிடம், குழு தலைவர் ரவிக்குமார் கேட்டறிந்தார்.
மேலும், வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் ஒதுக்கீடு பணிகளின் விவரம் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு பட்டியல் விபரம் குறித்தும் கேட்டறிந்து, வீடுகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சித் திட்டப்பணிகள் முடிக்க வேண்டும். பணிகள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தரத்துடன் நடைபெறுவதையும் உறுதி செய்துகொள்வதோடு, அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
கூடுதல் கலெக்டர் பத்மஜா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.