/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் பருவமழை முன்னேற்பாடு
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் பருவமழை முன்னேற்பாடு
ADDED : அக் 24, 2025 03:23 AM

விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியத்தில் பருவமழை மீட்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடந்தன.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பாதிப் புகளை தடுப்பதற்கு உள் ளாட்சி நிர்வாகத்தினர் முன் னேற்பாடுகளை செய்யு மாறு, கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, கோலியனுார் ஒன்றியத்தில் புயல், மழை பேரிடர் தடுப்பு முன்னேற்பாடு பணி களை மேற்கொண்டுள்ளனர் .
கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், 1,000 மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணிகளில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவசர கால மீட்பு பணிகளுக்காக 2 ஜே.சி.பி., வாகனங்கள், 2 ஜெனரேட்டர்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள், மின் உபகரணங்கள், 2 டன் சவுக்கு மரங்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. கோலியனுார் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் பேரிடர் பாதிப்பு காலங்களில் தீவிரமாக செயல்படுவதற்காக, ஊராட்சி பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவசர காலத்தில் தொடர்பு கொள்ளவும், அந்த நேரங்களில் மீட்பு குழு மூலம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பி.டி.ஓ.,க்கள் ஜெகதீசன், கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

