தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செல்லாத தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை… அதிகம்: வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் புலம்பல்

செல்லாத தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை… அதிகம்: வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் புலம்பல்

செல்லாத தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை… அதிகம்: வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் புலம்பல்


UPDATED : மே 06, 2026 03:45 AM

ADDED : மே 05, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 03:45 AM ADDED : மே 05, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான தபால் ஓட்டுகள் செல்லாததாக பதிவாகி இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என நான்குமுனை போட்டியில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் நேற்று முன்தினம் நடந்தபோது, த.வெ.க., அதிக இடங்களிலும், தி.மு.க., இரண்டாமிடமும், அ.தி.மு.க., மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி) ஆகிய தொகுதிகளில் 3 இடங்களில் தி.மு.க., கூட்டணி மற்றும் நான்கு இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் முதல் மூன்று சுற்றுகளில் மட்டுமே தி.மு.க., வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் மாறி, மாறி வந்தது. இதை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த சுற்றுக்களில் அ.தி.மு.க., - த.வெ.க., வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலையில் இருந்து வந்தனர்.

இதனால், ஓட்டு எண்ணும் அறையில் வேட்பாளர்களின் பூத் ஏஜன்ட்டுகள் சுற்றுக்கு சுற்று பதற்றத்துடன் காணப்பட்டனர். மாவட்டத்தில் சில தொகுதிகளில் தபால் ஓட்டுகள் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்தது.

மாவட்டத்தில் திருக்கோவிலுார், திண்டிவனம் (தனி) தொகுதிகளில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்படி செல்லாத ஓட்டுகள் சரியாக இருந்திருந்தால் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு மாறியிருக்கும் என அரசியல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

அதாவது, திருக்கோவிலுார் தொகுதியில் 2674 தபால் ஓட்டுகள் பதிவாகியதில், 444 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, விக்கிரவாண்டியில் 2816 ஓட்டுகளில் 28 ஓட்டுகளும், விழுப்புரத்தில் 2794 ஓட்டுகளில் 469 ஓட்டுகளும், வானுாரில் (தனி) 1677 ஓட்டுகளில் 561 ஓட்டுகளும், மயிலத்தில் 2011 ஓட்டுகளில் 155 ஓட்டுகளும், செஞ்சியில் 3137 ஓட்டுகளில் 1048 ஓட்டுகளும், திண்டிவனத்தில் 2239 ஓட்டுகளில் 334 ஓட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 7 தொகுதிகளில் மொத்தம் பதிவான 17,348 தபால் ஓட்டுகளில் 3639 ஓட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

இந்த தபால் ஓட்டுகள் சரியாக டிக் செய்யாதது மற்றும் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டம் வரை டிக் செய்தது, உறுதிமொழியை சரியாக டிக் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் தபால் ஓட்டுகள் பதிவு செய்திருந்தனர். மூத்த குடிமக்கள் ஓட்டுகளைவிட, அரசு ஊழியர்களின் ஓட்டுகள் தான் அதிகம். இதில், அதிகளவில் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டதில், அரசு ஊழியர்களின் ஓட்டுகளே அதிகம்.

-நமது நிருபர்-:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us