/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக மழை பாதிப்பு: அமைச்சர் பொன்முடி
/
விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக மழை பாதிப்பு: அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக மழை பாதிப்பு: அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக மழை பாதிப்பு: அமைச்சர் பொன்முடி
ADDED : டிச 02, 2024 04:33 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தான் 50 சதவீத்திற்கும் மேல் புயல், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது, முதல்வரும் விசாரித்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று காலை புயல், கனமழை பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மழை பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தொடர் புயல், மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கும் மேலாக இங்கு மழை பொழிந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், நள்ளிரவிலும் தூங்காமல் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி நிலவரங்களை கேட்டறிந்தார்.
தொடர் மழையால் மின்சாரம் தடைபடாமல் இருக்கவும், போக்குவரத்து தடைபடாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், கோட்டகுப்பம் பகுதியில் தான் மிக கனமழை பெய்து பாதித்துள்ளது. 21 இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1300 பேர் வரை அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், செஞ்சி பகுதியில், குடியிருப்புகளில் பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், புயல் கண்காணிப்பு அறையிலிருந்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
கலெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் கோட்டக்குப்பம், மரக்காணம் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
தொடர்ந்து, முதல்வரும், விழுப்புரம் மாவட்ட மழை நிலவரம் குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.
பாதிப்பு குறித்து, உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். திருச்சியிலிருந்தும் மீட்பு பணிக்கு ஊழியர்களை அனுப்புவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.