ADDED : ஜூன் 24, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது.
கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12:00 மணி அளவில் உச்சிகால பூஜை நடந்தது.
முன்னதாக பாலாம்பி அம்மனுக்கும், பாலேஸ்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, வாழைப்பூ கலச பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பின், கடன் நிவர்த்தி, நேர்த்திக்கடன் பூஜைகளும் நடந்தது.
பூஜையில் விழுப்புரம், கண்டாச்சிபுரம், சூரப்பட்டு, கெடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.