ADDED : டிச 06, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம் : மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோட்டக்குப்பம் அடுத்த கழுப்பெரும்பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தீபா, 23; பி.எஸ்சி., பட்டதாரி. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக கடலூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார்.
கடந்த 3ம் தேதி பயிற்சி வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தீபாவின் தாய், ரங்கநாயகி அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.