ADDED : டிச 25, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த நாகலாம்பட்டு மதுரா உளியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் மஞ்சுளா, 26; இவர், கடந்த 2019ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரபாகரன் தற்போது அந்தமானில் வேலை செய்து வருகின்றார். இதனால் மஞ்சுளா உளியம்பட்டு கிராமத்தில் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 21 ஆம் தேதி காலை மஞ்சுளாவிற்கும் அவரது தந்தை ஏழுமலைக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏழுமலை திட்டியதால் மஞ்சுளா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்ப வில்லை.
புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள்
போலீசார் வழக்குப் பதிந்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.