/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதி தாய் பலி; மகன் படுகாயம்
/
கார் மோதி தாய் பலி; மகன் படுகாயம்
ADDED : செப் 17, 2025 12:25 AM
திருவெண்ணெய்நல்லுார்; பைக் மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் எல்லப்பன், 35; இவர் நேற்று முன்தினம் மாலை 5:45 மணியளவில் பைக்கில் அவரது தாய் குலம்மாளை, 65; அழைத்துக் கொண்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசூர் சென்றார்.
பேரங்கியூர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் எல்லப்பன் ஓட்டி சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அங்கிருந்தவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை 2:20 மணியளவில் குலம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த எல்லப்பன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.