ADDED : ஆக 12, 2025 11:11 PM

செஞ்சி : செஞ்சியில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் நேற்று தமிழக முழுவதும் துவங்கப்பட்டது.
செஞ்சியில் இத்திட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, கூட்டுறவுத்துறை பதிவாளர் வெங்கட் குமார், தாசில்தார் துரைச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அறங்க ஏழுமலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரை, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.