
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி:கீழ்பாப்பம்பாடியில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
வல்லம் ஒன்றியம், கீழ்ப்பாப்பம்பாடி ஊராட்சியில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருள் வினியோகம் செய்வதை மாநில உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் செஞ்சி சிவா துவக்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சரவணன், ஊராட்சித் தலைவர் நாகமுத்து, துணைத்தலைவர் சேகர், விற்பனையாளர் பொன்னழகன், கிளைச் செயலாளர் குப்பன் மற்றும் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.