ADDED : ஆக 08, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த மேல்செவலாம்பாடி, காந்தி நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட மாநாடு நடந்தது.
வட்டக்குழு கவிதா தலைமை தாங்கினார். கர்லினா வரவேற்றார். மாநில துணை செயலாளர் கீதா துவக்கவுரை நிகழ்த்தினார்.
வட்ட செயலாளர் இலக்கிய பாரதி வேலை அறிக்கை வாசித்தார்.
மாநில தலைவர் வாலண்டினா சிறப்புரையாற்றினார்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்தல், பெண்கள், பெண் குழந்தைகளை பாதுகாத்தல், நுண் நிதி நிறுவன மோசடியை தடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அஞ்சலை நன்றி கூறினார்.