ADDED : டிச 09, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : தாயை காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த எறையானுாரைச் சேர்ந்தவர் சரோஜா, 70; இவர் தனது மகள் உமாமகேஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 5ம் தேதி சரோஜா, மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.