/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.கே.டி., சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
வி.கே.டி., சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
வி.கே.டி., சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
வி.கே.டி., சாலையில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 20, 2024 05:34 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) சாலையில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளில் பேட்ச் ஒர்க்கை தரமாக செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், பேட்ச் ஒர்க் செய்வதற்காக, 7 கோடி ரூபாயை நகாய் ஒதுக்கீடு செய்து, இம்மாத துவக்கத்தில் பணிகள் துவங்கியது.
இதில், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பிரியும் இடத்திலிருந்து 9 கி.மீ., துாரத்திற்கு கப்பியாம்புலியூர், மேல்பாதி கூட்ரோடு வரை திட்டு திட்டாக பணிகளை செய்துள்ளனர்.
கோலியனுார் கூட்ரோடு பகுதியிலிருந்து பேட்ச் ஒர்க் துவங்கி உள்ளது. வாணியம்பாளையம், வெ.அகரம் ஆகிய இரு இடங்களில் மேம்பால பணிகள் பாதியில் நிற்கிறது. இவ்விரு இடங்களில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
கண்டரக்கோட்டை ஆற்றுபாலம் அருகிலும், கொள்ளுக்காரன்குட்டை, வடலுார் அடுத்த மருவாய், பரவனாறு பாலம், மருதுார் சாலை பிரியும் இடங்களிலும் செப்பனிடும் பணி முடிந்துள்ளது. அதன்பிறகும் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவு நேர வாகன பயணம் சிரமமாக உள்ளது. விபத்து அபாயமும் தலைதுாக்கி உள்ளது.
எனவே, வி.கே.டி., சாலையில் அனைத்து பகுதியிலும் ஏற்பட்டுள்ள பள்ளங்களை கண்டறிந்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகாய் அதிகாரி கூறுகையில், 'தற்போது ஒரு லேயர் மட்டுமே சாலை போடப்பட்டுள்ள
நிலையில் மழையால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மழை முடிந்த பிறகு இரண்டாவதாக சிறிய ஜல்லிகளை போட்டு பைன் லேயர் போட வேண்டும். பல இடங்களில் பேட்ச் ஒர்க் நடக்கும்போதே கனரக வாகனங்கள் அதன் மீது பயணிப்பதால் பணியை சரிவர செய்ய இயலவில்லை. அதனால் பல்வேறு இடங்களில் புதிதாக பேட்ச் ஒர்க் செய்தும், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் இப்பகுதிகளை கண்காணித்து சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பேட்ச் ஒர்க் பணிகள் முழுமையாக முடிவடையும்' என்றார்.

