/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
/
பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
பாதாள சாக்கடை மேன்ேஹால் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 31, 2026 06:16 AM

விழுப்புரம்: திருக்கோவிலுார் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலை வழியாக, திருக்கோவிலுார், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்தில் இருந்து மாம்பழப்பட்டு ரோடு ரயில்வே கேட் வரை சாலையின் சென்டரில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது.
இதற்கான மேன்ேஹால் பகுதிகள் தற்போது பல இடங்களில் உள் வாங்கி பள்ளமாக காணப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் வரும்போது பள்ளத்தில் இறங்காமல் இருக்க, சாலையில் கிராஸ் செய்கின்றனர்.
அப்போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை மேன் ேஹால் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

