/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை தேவை
/
திண்டிவனத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை தேவை
திண்டிவனத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை தேவை
திண்டிவனத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை தேவை
ADDED : ஜன 12, 2025 10:16 PM

திண்டிவனம்; திண்டிவனத்தில் சாலையோரம் மீன் கடைகளை அமைத்து விற்பனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திண்டிவனத்திலுள்ள ஓ.பி.ஆர்.பூங்கா அருகில் நகராட்சி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இந்த இடம் குறுகிய இடத்தில் இருப்பதால் திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் உள்ள மரக்காணம் கூட்ரோடு, செஞ்சி ரோடு, மாரியம்மன் கோவில் சந்திப்பு, தீர்த்தக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் சாலையோரம் மீன் கடைகள் அமைக்கப்பட்டு திறந்த வெளியில் நகராட்சி அனுமதியின்றி, சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்னை செய்கின்றனர்.
மீன் வாங்க வருபவர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வாங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக செஞ்சி ரோடு, தண்ணீர் தொட்டி வேன்கள் நிறுத்தும் இடத்தில், அடாவடியாக மீன்கடைகளை சாலையோரம் போட்டு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்கின்றனர்.
இதுபற்றி நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் சார்பாக பல முறை புகார்கள் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.சாலையோரம் மீன் கடைகளை வைத்திருப்பவர்கள் மீது நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மீன்மார்க்கெட்டை ஒரே இடத்தில் அமைத்து தருவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.