/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பந்தாடப்படும் நகராட்சி கமிஷனர்கள்; திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
/
பந்தாடப்படும் நகராட்சி கமிஷனர்கள்; திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
பந்தாடப்படும் நகராட்சி கமிஷனர்கள்; திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
பந்தாடப்படும் நகராட்சி கமிஷனர்கள்; திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
ADDED : ஆக 19, 2025 12:15 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த நகராட்சியாக திண்டிவனம் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்மலா ரவிச்சந்திரன் நகரமன்ற தலைவராக உள்ளார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் அதிகம் மெஜாரிட்டியாக உள்ள நகராட்சியில், தி.மு.க.,கவுன்சிலர்களுக்குள் பல்வேறு கோஷ்டிகள் உள்ளது.
இதனால் நகராட்சி பணிகளை எந்த கவுன்சிலருக்கு ஒதுக்குவது தொடர்பாக கமிஷனருக்கு சிக்கல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த குமரன், பணியில் சேர்ந்து 8 மாதங்களே ஆன நிலையில், அவர் தமிழ்நாட்டின் கடை கோடியான ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது, திண்டிவனம் நகராட்சிக்கு தற்போது நிரந்தர கமிஷனர் இல்லாததால், கள்ளக்குறிச்சி நகராட்சியில் பணியாற்றும் சரவணன், கூடுதல் பொறுப்பாக திண்டிவனத்தை சேர்த்து கவனிwக்கிறார்.
வழக்கமாக திண்டிவனம் நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டால், அருகில் உள்ள விழுப்புரம் நகராட்சி கமிஷனரை கூடுதல் பொறுப்பாக நியமிப்பது வழக்கம். ஆனால் தற்போது தொலைவிலுள்ள கள்ளக்குறிச்சியிலிருந்து திண்டிவனம் நகராட்சி பணிகளை மேற்கொள்வதில், ஆணையாளர் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
திண்டிவனம் நகராட்சிக்கு வரும் கமிஷனர் பலர் குறைந்தது ஒரு ஆண்டு கூட பணியாற்றியதில்லை. ஏற்கனவே பணியாற்றிய 3 கமிஷனர்களும் ஒரு ஆண்டு கூட பூர்த்தி செய்யாமல், பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் அடிக்கடி கமிஷனரை பணியிட மாற்றம் செய்யப்படுவதால், நகராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக, நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசியும், ஒன்றும் நடக்கவில்லை.
தற்போது கூடுதல் பொறுப்பு வகிக்கும் கமிஷனர் தினந்தோறும் திண்டிவனம் நகராட்சிக்கு வந்து பணிகளை பார்க்க முடியாத நிலை உள்ளது.
நாகராட்சி நிர்வாகம், திண்டிவனம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஒரு ஆணையாளரை நியமிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.