ADDED : மே 31, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி திடலில், மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கரன், குமார் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் 17 வார்டு, தாமரை குளம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளால் வீடுகளில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்தும், தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் வீரமணி, வட்ட குழு உறுப்பினர்கள் நீலா, ராஜாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.