நகராட்சி பொறியாளர் பணியிடம் காலி: திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
நகராட்சி பொறியாளர் பணியிடம் காலி: திண்டிவனத்தில் பணிகள் பாதிப்பு
UPDATED : செப் 27, 2026 06:20 PM
ADDED : செப் 27, 2026 06:13 PM
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சியின் பொறியாளர் பணி காலியாக உள்ளது. விழுப்புரம் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி திண்டிவனம் நகராட்சி பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். இவர், நீண்ட கால மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
இந்நிலையில் விழுப்பும் நகராட்சிக்கு, கடலுார் நகராட்சியில் பணிபுரியும் பொறியாளர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் திண்டிவனம் நகராட்சிக்கு பொறியாளர் பொறுப்பிற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
இதனால், நகராட்சியில் ஏற்கனவே மேற்கொண்ட அத்தியாவசிய பணிகளுக்கு பில் செட்டில்மென்ட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளுக்கு யார் உத்தரவிடுவது போன்ற நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சிக்கு நிரந்தர பொறியாளரை நியமிக்க சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
