ADDED : ஆக 28, 2025 02:23 AM

திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி குறித்து இரு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இதில், முனைவர் திருவரசன் தலைமை தாங்கினார். பயிற்சியில் காளான் சாகுபடி பற்றிய விளக்க உரையை உதவி பேராசிரியர் ஆனந்தி, எடுத்துரைத்து, காளான் வளர்ப்பு, அறுவடை மற்றும் காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பற்றிய செயல்முறை விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.
காளான் சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை பற்றி முனைவர் செந்தமிழ் விளக்கி கூறினார். இதில் செபஸ்டியன், ஜமுனா, விஜயகீதா ஆகியோர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட செயல்பாடுகள் குறித்து கூறினர்.
பயிற்சி முகாமில், 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் காளான் வளர்ப்பு கையேடு வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் ஆனந்தி செய்திருந்தார்.