/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்திட கோரி முஸ்லிம் மக்கள் கழகம் தீர்மானம்
/
எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்திட கோரி முஸ்லிம் மக்கள் கழகம் தீர்மானம்
எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்திட கோரி முஸ்லிம் மக்கள் கழகம் தீர்மானம்
எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்திட கோரி முஸ்லிம் மக்கள் கழகம் தீர்மானம்
ADDED : டிச 01, 2025 05:58 AM

விழுப்புரம்: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்திடக் கோரி, முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில இளைஞரணி தலைவர் விக்ரம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுைஹல் முகமது வரவேற்றார். நகர மகளிரணி செயலாளர் மதினா, பொருளாளர் ஆயிஷாபேகம், தலைவர் சாகிராபானு முன்னிலை வகித்தனர். நிறுவனர் ஜைனுதீன் சிறப்புரையாற்றனார்.
மாவட்ட தலைவர் ஷோக்கத்அலி, சமூக ஆர்வலர் தணிகைமலை, நகர செயலாளர் அப்துல்ஹக்கீம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., கொண்டு வந்த மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டிப்பது. எஸ்.ஐ.ஆரை., மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும். திண்டிவனத்தில் அரசு ஒருங்கிணைந்த ஆதார் மையம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காணை ஒன்றிய தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.