/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிதி நிர்வாகமும் தெரிந்திருக்க வேண்டும்; மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் 'அட்வைஸ்'
/
நிதி நிர்வாகமும் தெரிந்திருக்க வேண்டும்; மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் 'அட்வைஸ்'
நிதி நிர்வாகமும் தெரிந்திருக்க வேண்டும்; மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் 'அட்வைஸ்'
நிதி நிர்வாகமும் தெரிந்திருக்க வேண்டும்; மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : பிப் 15, 2024 10:23 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு சார்பில், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடந்த முகாமை கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தொடங்கி வைத்து, மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி பேசியதாவது:
அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த கல்விக் கடன் முகாம், கல்வி கடன் வழங்குதற்காக மட்டுமின்றி, வர்த்தகம், நிதி நிர்வாகம் போன்றவற்றையும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படுகிறது.
முதலில் அரசு நிர்வாகம், பட்ஜெட், உள்ளாட்சி நிர்வாகம், வரி விதிப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்குவது, அதற்கான நிதி ஆதாரம், கடன் திட்டங்கள், அதற்கான வட்டி விகிதங்கள், அதனை திருப்பி செலுத்தும் ஆதாரம் போன்றவற்றை நாம் திட்டமிட்டிருக்க வேண்டும். தொழில் தொடங்கும் ஆர்வம் இருக்கும் பலருக்கு, நிதி ஆதாரம் இருக்காது. அதற்காகவே அரசு சார்பில் வங்கிகள் மூலம் கடன் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.
அதன்படி, மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்காகவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கடன் வழங்குதவற்கான அரசின் வித்யாலட்சுமி போர்ட்டலில் நீங்கள் இணைய வழியில் விண்ணப்பித்தால், வங்கிகள் மூலம் பரிசீலனை செய்து கடன் வழங்கப்படும். வாங்கும் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான், நம்மை போன்ற பிறருக்கும் வங்கிகள் கடன் வழங்கவும், அதன் நிதி ஆதாரத்தையும் அதிகரிக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமின் நிறைவாக கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை தேர்வான 98 மாணவர்களுக்கு 5.35 கோடி ரூபாய் கல்விக் கடனுக்கான ஆணை வழங்கப்பட்டது.