/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜன 22, 2024 12:42 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த கெண்டியங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
கெண்டியங்குப்பம் காமாட்சி அம்மன் உடனுறை முத்துமாரியம்மன் கோவில், சங்கராபரணீஸ்வரர் மற்றும் பாலமுருகன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 19ம் தேதி காலை 9.00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது.
20ம் தேதி காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, தெய்வத்தமிழ் மறை இசையும், மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று 21ம் தேதி காலை 5:30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடாகி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.
தொடர்ந்து 8:00 மணிக்கு பாலமுருகனுக்கும், 8:30 மணிக்கு சங்கராபரணீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகமும் நடந்தது.
சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.