/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட சிலம்பம் போட்டி முட்டத்துார் மாணவர்கள் வெற்றி
/
மாவட்ட சிலம்பம் போட்டி முட்டத்துார் மாணவர்கள் வெற்றி
மாவட்ட சிலம்பம் போட்டி முட்டத்துார் மாணவர்கள் வெற்றி
மாவட்ட சிலம்பம் போட்டி முட்டத்துார் மாணவர்கள் வெற்றி
ADDED : ஏப் 16, 2025 08:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: செஞ்சியில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், முட்டத்துார் கிராம மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் நமது சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழு, செஞ்சியில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றது.
9 வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 30 பேர் பங்கேற்றனர். இதில், 10 பேர் முதலிடமும், 12 பேர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் சுரேந்தர், கிராம முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.