/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு பள்ளி நூற்றாண்டு விழா
/
நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசு பள்ளி நூற்றாண்டு விழா
ADDED : ஏப் 14, 2025 06:23 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு துவக்க பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது.
செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு துவக்க பள்ளி 1882ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 143 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசின் வழி காட்டுதல் படி நேற்று முன்தினம் நூற்றாண்டு விழா நடந்தது.
பகல் 2 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசை பொருட்களை பள்ளிக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊராட்சி தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். கதிரவன் சீனு வரவேற்றார். ஓய்வு பெற்ற சி.இ.ஓ., மதியழகன் புகைப் படக் கண்காட்சியை திறந்து வைத்தார். தலைமையாசிரியர் அறிவழகன் நுாற்றாண்டு விழா அறிக்கை வாசித்தார். முனைவர் செல்லபெருமாள் நுாற்றாண்டு விழா ஜோதியை ஏற்றினார். தடயவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் உறுதிமொழி வாசித்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நுாற்றாண்டு விழா நினைவு துாணை திறந்து வைத்து பேசினார். சென்னை மாநகராட்சி மன்ற பணிக்குழு தலைவர், முன்னாள் மாணவர் சிற்றரசு, ஒன்றிய சேர்மேன் விஜயகுமார், பேருராட்சி தலைவர் மொக்தியார் அலி, டி.இ.ஓ.,க்கள் அருள், சிவசுப்ரமணியன், பி.இ.ஓ.,க்கள் சிவக்குமார், புருஷோத்தமன் மற்றும் மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் மகேந்திரன் நன்றி கூறினார்.

