UPDATED : ஆக 05, 2026 10:26 PM
ADDED : ஆக 05, 2026 07:23 PM
செஞ்சி: நந்தன் கால்வாய் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடந்த, 2018ம் ஆண்டில் இருந்து தன்னார்வல தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நந்தன் கால்வாயில் துார்வாரி கடை மடைவரை தண்ணீர் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டுக்கான நந்தன் கால்வாய் துார்வாரும் பணியை நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் மாதப்பூண்டி ஏரி பாசன நீர் அமைப்புடன் இணைந்து செய்ய உள்ளனர். இதற்கான பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் சேகர், செயலாளர் ரமேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், சந்தானம், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் மணி, செயலாளர் அறவாழி, ஓய்வு பெற்ற வன அலுவலர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் மதியழகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
