/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் ெஷட்டர் திறக்காமல்... அலட்சியம்; துறிஞ்சல் ஆற்றில் வீணாகும் தண்ணீர்
/
நந்தன் கால்வாய் ெஷட்டர் திறக்காமல்... அலட்சியம்; துறிஞ்சல் ஆற்றில் வீணாகும் தண்ணீர்
நந்தன் கால்வாய் ெஷட்டர் திறக்காமல்... அலட்சியம்; துறிஞ்சல் ஆற்றில் வீணாகும் தண்ணீர்
நந்தன் கால்வாய் ெஷட்டர் திறக்காமல்... அலட்சியம்; துறிஞ்சல் ஆற்றில் வீணாகும் தண்ணீர்
ADDED : ஆக 21, 2024 06:42 AM

செஞ்சி : நந்தன் கால்வாயில் விழுப்புரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வருவதற்கான ெஷட்டர்களை திறக்காமல் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டி வருவதால் மாவட்ட ஏரிகள் நிரம்பாமல் மழை நீர் வீணாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பனமலை ஏரிக்கு திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள கீரனுார் தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.40 கி.மீ., துாரத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ., துாரத்திற்கும் நந்தன் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகளும் நேரடியாக தண்ணீர் நிரம்பும்.
கடைமடை ஏரியான பனமலை ஈசா ஏரி நிரம்பியதும் இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.566 ஏக்கர் நிலமும், விழுப்புரம் மாவட்டத்தில் 5,032 ஏக்கர் நிலமும் என மொத்தம் 6,598 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் ஏரியில் இருந்து துவங்கும் துறிஞ்சல் ஆற்றுக்கு என நிரந்தர நீர் வரத்து இல்லை. மழைக் காலத்தில் துறிஞ்சல் ஆற்று நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீரே இதற்கு நீர் ஆதாரம். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி இரவு துவங்கி 11ம் தேதி அதிகாலை வரை பெய்த கனழையினால் துறிஞ்சல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
மறுநாள் முதல் நந்தன் கால்வாயில் தண்ணீர் வர துவங்கியது. இதன் மூலம் திருண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கடந்த 11ம் தேதி முதல் தண்ணீர் செல்கிறது.
இந்த ஏரிகளுகளுக்கு தண்ணீர் செல்வதற்காக திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் குளத்துாரில் உள்ள 2 ெஷட்டர்களையும் பொதுப் பணித்துறையினர் மூடியுள்ளனர்.
நந்தன் கால்வாயின் மொத்த அகலம் 5.5 மீட்டராக உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் அகலம் 1.5 மீட்டராக உள்ளது. 5.5 மீட்டர் அகலம் உள்ள பிரதான கால்வாயில் வரும் தண்ணீர் 1.5 மீட்டம் அகலம் உள்ள ஏரி கால்வாய்களுக்கு சென்றது போக மீதம் உள்ள தண்ணீர் கால்வாய் தேக்கம் அடைந்து நின்று விடுகிறது. இதன் காரணமாக துவக்கத்திலேயே தண்ணீர் வீணாக மீண்டும் துறிஞ்சல் ஆற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது.
இந்த நிலையை விளக்கி நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கத்தினரும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் குளத்துார் ெஷட்டரை திறக்குமாறு கடந்த ஒரு வாரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் சார்பில் பொதுப்பணித் துறையினரிடம் மனுவும் கொடுத்தனர். நேற்று முன்தினம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனாலும் திருவண்ணாமலை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீண் பிடிவாதம் செய்து குளத்துார் ெஷட்டரை திறக்காமல் உள்ளனர். இனால் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக துறிஞ்சல் ஆற்று நீர் வீணாகி வருகின்றது.
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நந்தன் கால்வாய் மூலம் பயணடையும் கிராம பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் செய்யவும், போராட்டம் நடத்தவும் முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் துறிஞ்சல் ஆற்று தண்ணீர் இது வரையில் பெருமளவு வீணாகி உள்ளது. தற்போது மழை பெய்தால் அந்த தண்ணீரும் வீணாகும். இதனால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, கலெக்டர் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

