/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நத்தமேடுபுதுார் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
நத்தமேடுபுதுார் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2025 04:05 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கல்பட்டு ஊராட்சி நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், தீபாராதனையும், மாலை முதல் கால யாக பூஜையும் நடந்தது. 4ம் தேதி 2ம் கால யாக பூஜையும், மாலை 5.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
5 ம் தேதி காலை 7.30 மணிக்கு 4ம் கால யாக பூஜையும், கோ பூஜையும், மகா தீபாரதனை நடந்தது. காலை 10.00 மணிக்கு கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கற்பக விநாயகர் கோவில் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.