/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய குழந்தைகள் தினம் விழிப்புணர்வு நடை பயணம்
/
தேசிய குழந்தைகள் தினம் விழிப்புணர்வு நடை பயணம்
ADDED : நவ 15, 2025 05:26 AM

விழுப்புரம்: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கான பிரச்னை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். 600க்கும் மேற்பட்ட அரசு சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர், தனியார் கல்லுாரிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி சென்றனர். ஊர்வலம் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை நடந்தது.
ஊர்வலத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பயிற்சி) இளவரசி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஆழிவாசன் உட்பட பலர் பங் கேற்றனர்.

