sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை

/

தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை

தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை

தேசிய பயிர் காப்பீடு திட்டம் ரூ.51 கோடி இழப்பீடு தொகை


ADDED : ஜூலை 25, 2025 10:25 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், பயிர் காப்பீடு திட்டத்தின்படி விவசாயிகளுக்கு 51 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை மூலம், கடந்த 2024-25 ஆண்டிற்கு 67 ஆயிரத்து 643 ஏக்கர், பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 28 ஆயிரத்து 362 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இவர்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக 51 கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2023-24 ஆண்டிற்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 794 ஏக்கர், பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதில், 52 ஆயிரத்து 608 விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். இவர்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us