/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேஷனல் இன்சூரன்ஸ் முகவர்கள் குறைதீர்ப்பு
/
நேஷனல் இன்சூரன்ஸ் முகவர்கள் குறைதீர்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் நேஷனல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகத்தில், முகவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கிளை மேலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர்கள் கிஷோர் குமார், புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மண்டல மேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர் மகாலட்சுமி ஆகியோர் முகவர்களுக்கான குறைகளை கேட்டறிந்து, தீர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து அவர்கள், சிறந்த முகவர்களை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், முகவர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.