/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மல்லர் கம்பம் விழுப்புரம் வீரர் சாதனை
/
தேசிய மல்லர் கம்பம் விழுப்புரம் வீரர் சாதனை
ADDED : பிப் 16, 2025 03:04 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாணவர் ஹேமச்சந்தர், தேசிய மல்லர் கம்ப போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், 38வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
அதில், தமிழக மல்லர் கம்ப அணி சார்பில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹேமச்சந்தர், யாழினி, சங்கீதா, லேனா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் ஹேமச்சந்தர், குழு போட்டி, தனித்திறமை போட்டி, தொங்கு மல்லர் கம்பத்திலும், கயிறு மல்லர் கம்பத்திலும் மூன்றாம் இடத்தை பெற்று, மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன், மல்லன் ஆதித்தன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

