/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 30, 2025 11:15 PM

விக்கிரவாண்டி:-
தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வென்ற ஒய்காப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-25 ம் ஆண்டில் தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு சென்னை நேரு விளை யாட்டு அரங்கில், பாராட்டு விழா நடந்தது.
அதில் விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி சார்பில் பூப்பந்து, கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 48 மாணவ, மாணவியரை அமைச்சர்கள் மகேஷ், சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.
மாணவர்களை வேலுார் சி.எஸ்.ஐ., பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.